மின்விளக்கு பழுதால் விபத்து அபாயம்

Update: 2025-11-02 17:25 GMT
கடலூர் முதுநகர் அடுத்த சேடப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் கடந்த 2 வருடங்களாக மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பஸ் ஏற காத்திருக்கும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே இருக்கின்றனர். மேலும் அப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே அங்கு உள்ள மின்விளக்கை சீரமைக்க வேண்டும். அல்லது புதிதாக மின்விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்