தஞ்சை மாநகராட்சி வார்டு நம்பர் 47 ஜே.பி.எல்.நகர் பகுதியில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து இருக்கிறது. மின்கம்பத்தின் மேற்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.