மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி திருமணஞ்சேரி கோவில் வாசலில் இருந்து ஆற்றங்கரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பகுதியில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசும் போது மரக்கிளைகளில் சிக்கி மின்வெட்டு ஏற்படுகிறது. எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.