உடைந்த மின்கம்பம் அகற்றப்படுமா?

Update: 2025-11-02 11:52 GMT

பென்னாகரம் அருகே உள்ள எட்டி குட்டை கிராமத்தில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு செல்லும் பிரதான மின் கம்பத்தின், மேல் பகுதி முழுவதுமாக உடைந்து, மின் கம்பிகளின் உதவியுடன் தொங்கிக் கொண்டு உள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் அருந்து மக்கள் மீது விழ அதிக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு எப்போது தான் தீர்வு கிடைக்குமோ?

-முருகன், பென்னாகரம்.

மேலும் செய்திகள்