ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி அலிகார் சாலையில் இருந்து செல்லும் 300 மீட்டர் சாலையில் போதிய மின்விளக்கு வசதிகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இச்சாலை இருள்சூழ்ந்து காணப்படுகிறது. அத்துடன் விஷபூச்சிகளின் நடமாட்டமும் அதிகம் இருப்பதால் இச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் நடைபாதையினர் அச்சமடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கூடுதலாக மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.