மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதூர் கூட்டுரோட்டில் உள்ள மின்விளக்கு பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் அங்கு வாகன விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.