தியாகதுருகம் புக்குளம் திருமலை நகரில் புதிதாக தார்சாலை போடப்பட்டது. ஆனால் அங்குள்ள மின்கம்பத்தின் ஸ்டே கம்பி சாலையில் இருந்து அகற்றப்படாமல் உள்ளது. இதனால் ஸ்டே கம்பியானது சாலையின் குறுக்கே செல்வதால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து ஸ்டே கம்பியை விபத்து ஏற்படாத வகையில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.