கரூர் மாவட்டம் திருக்காடுதுறையிலிருந்து தவுட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பம் நடப்பட்டு மின்கம்பிகள் பொருத்தப்பட்டு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்கம்பிகள் பொருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. பள்ளி வேன் மற்றும் மற்ற வாகனங்கள் செல்லும் போது மின்கம்பி மீது உரசினாலோ அல்லது மின்கம்பி அறுந்து விழுந்தாலோ பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.