கொடுமுடி அருகே சென்னசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டில் கொல்லம்புதுப்பாளையம் மெயின் வீதியில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்மோட்டார் ஒயர் மீது வேப்பமரத்தின் கிளைகள் உரசியபடி நிற்கிறது. இதனால் மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மரக்கிளைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?