திருச்சி மாநகராட்சி செல்வநகர் கம்பர் தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில் சாலை ஓரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்த மின்கம்பிகள் தாழ்வாக செல்வதினால் இந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அவற்றின் மீது உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள் இந்த மின்கம்பிகளில் உரசினால் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.