அரியலூரில் இருந்து ஸ்ரீபுரந்தான் செல்லும் சாலையில் நாகமங்கலம் மாதா கோவிலுக்கும் - திருக்கோணம் பாதைக்கும் இடைப்பட்ட பகுதியில் சுடுகாட்டிற்கு அருகே ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் சிதிலமடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. காற்றடிக்கும் நேரத்தில் இந்த மின்கம்பம் முறிந்து முக்கிய சாலையில் விழுந்தால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாய்ந்துள்ள மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.