எலும்புகூடான மின்கம்பம்

Update: 2025-10-19 11:22 GMT

சென்னை மடிப்பாக்கம், கார்த்திகேயபுரம் 4-வது தெருவின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று சிதிலமடைந்து எலும்புகூடாக காட்சியளிக்கிறது. மழைக்காலம் தொடங்கியதால் அடிக்கடி மின்சார தட்டுப்பாடும் ஏற்படுகிறது. இதனால் மின்விபத்து ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்திலேயே பொதுமக்கள் அப்பகுதியை கடக்கும் அவலம் உள்ளது. ஆபத்தை விளைவிக்கும்முன் சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் அந்த மின்கம்பத்தை மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்