மின்விளக்கு வசதி வேண்டும்

Update: 2025-10-19 09:52 GMT

திருவாரூர் தைக்கால் அருகே அம்மையப்பன் பிரிவு புறவழிச்சாலை பகுதியில் மின்விளக்குகள் இல்லை. இரவு நேரத்தில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களும் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மின்விளக்கு வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்