விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-10-12 16:08 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள கணபதிபுரம் கிராமத்தில் இருந்து கந்தர்வக்கோட்டை செல்லும் சாலையின் அருகே செல்லும் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக வாகனங்களில் உரசும் நிலையில் செல்கின்றன. பஸ்கள், பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களில் உரசும் வகையில் தாழ்வாக செல்வதால் பெரிய அளவில் விபத்த ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பியை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்