ஆபத்தான மின்மாற்றி

Update: 2025-10-12 11:16 GMT

கரூர் மாவட்டம் நடையனூர் அரசு உதவிபெறும் பள்ளிக்கு பின்புறம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி மின்மாற்றி அமைக்கப்பட்டது. அந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மின்மாற்றியின் கம்பங்கள் சேதமடைந்து, முறிந்து விழும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இப்பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய மின்மாற்றிக்காக மின்கம்பங்கள் நடப்பட்ட நிலையில், இன்னும் பழைய மின்மாற்றியிலேயே மின் வினியோகம் தொடர்கிறது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படும் முன்பு புதிய மின்மாற்றியில் இருந்து மின் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்