சென்னை, புளியந்தோப்பு, வ.உ.சி. நகர் 6-வது தெருவில் உள்ள மின் இணைப்புபெட்டியின் ஒயர்கள் வெளியே தெரிந்தபடி, குடியிருப்புவாசிகளுக்கு ஆபத்தாக உள்ளது. மின்விபத்து குறித்த அச்சத்திலேயே பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் இந்த பகுதியை கடக்கும் அவலநிலை இருக்கிறது. குழந்தைகள் அதிகமாக நடமாடும் இடம் என்பதால் சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் இந்த மின்பெட்டியின் ஒயர்களால் ஆபத்து ஏற்படும்முன் , தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.