செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சலூர் ஊராட்சி, அகஸ்தீஸ்வரர் நகரில் உள்ள வ.உ.சி. சாலையில் உள்ள மின்விளக்கு பல நாட்களாக எரியாமல் அங்குள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் பாதசாரிகள் சிரமம் அடைந்தார்கள். இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட மின்வாரிய துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து மின்விளக்கு எரிய வழிவகை செய்தார்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தூண்டுதலாக இருந்த ‘தினத்தந்தி‘ பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.