பிரம்மதேசம் அருகே திண்டிவனம்- மரக்காணம் நெடுஞ்சாலையில் சிறுவாடி கிராமத்தில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் சூழ்நிலை உள்ளது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதால் அப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.