விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட கக்கன்நகர் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள உயரழுத்த மின்கம்பிகளை தாங்கி நிற்கும் 2 கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது அந்த மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாய நிலை உள்ளதால் அவ்வழியே செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சேதம் அடைந்த கம்பங்கைள அகற்றி புதிய மின்கம்பங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.