திண்டிவனம் நகரில் உள்ள அரசு கலைக்கல்லூரி சாலையில் ஸ்கடர் நகரில் தெருவின் நடுவே மின் கம்பம் அமைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.