தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-09-28 15:02 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள பொக்கிஷக்காரன்பட்டி கிராமத்தில் இருந்து விவசாய மின் இணைப்புகளுக்கு செல்லும் பல மின்கம்பங்கள் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும், முறிந்த நிலையிலும் ஆபத்தான நிலையில் இருந்தன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, சிதிலமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக மின் புதிய மின் கம்பங்களை அமைத்து அதன் மூலம் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்கி உள்ளனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்