சென்னை அமைந்தகரை திருவீதி அம்மன் கோவில் பிரதான தெருவில் உள்ள ஒரு மின்சார பெட்டி திறந்தநிலையில் பொதுமக்களுக்கு மிகவும் ஆபத்தானநிலையில் உள்ளது. மின்விபத்துகள் ஏற்பட்டால்தான் இவைகள் சரிசெய்யப்படுமா? என்பது பொதுமக்களின் குமுறலாக இருக்கிறது. மின்பெட்டியின் மூடி சேதமடைந்தும், மின் ஒயர்கள் சாலைகளில் பரந்துவிரிந்தும், பார்பதற்கே அபாயகரமாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களின் சிரமத்தை போக்கிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.