பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் அருகே அரியகுளம் விலக்கு பஸ் நிறுத்தம் தென்பகுதியில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.