அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தெற்கு பரணம் மாரியம்மன் கோவில் தெருவில் சாலையோரம் மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கம்பத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக தெருவிளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இந்த கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதனால், இரவு நேரங்களில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எரியாமல் உள்ள இந்த தெருவிளக்கை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.