பாபநாசம் பகுதி இடையிருப்பு அருகே மனப்படுகை செல்லும் சாலையோரத்தில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியை தாங்கி பிடித்துள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து இருக்கிறது. சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்மாற்றி வலுவிழந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் நிலையில் இருப்பதால் மின்மாற்றி இருக்கும் பகுதியை வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, ஆபத்தான நிலையில் இருக்கும் மின்மாற்றியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.