மின்கம்பத்தை சூழ்ந்த செடிகள்

Update: 2025-09-21 10:20 GMT

பூதலூர் அருகே தொண்டராயன்பாடி உள்ளது. அய்யனாபுரத்தில் இருந்து தொண்டராயன்பாடி செல்லும் பாதையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தை சுற்றிலும் செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மின்கம்பம் இருப்பதே தெரியாத அளவுக்கு செடிகள் வளர்ந்து உள்ளன. பலத்த காற்று வீசும் போது செடிகளால் மின்வெட்டு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை சுற்றி உள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்