சென்னை திருவொற்றியூர் காலடிபேட்டை குமரன் நகர் 2-வது மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின்பெட்டி பொதுமக்களுக்கு ஆபத்தாக திறந்தநிலையில் உள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்த பகுதியில் மழைக்காலங்களில் மின்சாரத்தால் பாதிப்பு ஏற்படும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்பெட்டியை மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.