மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டில் காமராஜர் தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்தது உள்ளது. இதனால் அப்பகுதியை கடக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?