கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் இணையதள சேவை நிறுவனங்கள் சார்பில் வீடுகளுக்கு இணையதள இணைப்பு கொடுப்பதற்காக பயன்படுத்தப்படும் வயர்கள், சாலையோர மின்கம்பங்களில் கட்டி வைக்கப்படுகிறது. சில நிறுவனத்தினர் தனியாக கம்பம் நட்டு வைத்து அதில் வயர்களை கட்டி வைக்கின்றனர். இந்த வயர்களில் பல சாலையின் குறுக்காக செல்கின்றன. நாளடைவில் அவற்றின் கடின தன்மை குறைவதால் தாழ்வாக தொங்குகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இணையதள சேவைக்காக பயன்படுத்தும் வயர்கள் தாழ்வாக தொங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.