அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள மின்கம்பத்தில் சுற்றிலும் செடி கொடிகள் நன்கு படர்ந்து காணப்படுகின்றன. இதனால் மழைக்காலத்தில் செடிகளை யாராவது தொட்டால் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆபத்து ஏற்படும் முன்பு மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?