மயிலாடுதுறை பகுதி செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர்-அன்னவாசல் சாலையோரத்தில் வயல்வெளிகள் உள்ளது. இந்த வயல்வெளி பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் வயலுக்குள் அறுவடை எந்திரங்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விவசாய தொழிலாளர்கள் அச்சத்துடன் பணி செய்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.