ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் பகுதியில் சில நாட்களாக குறைந்த மின்னழுத்த பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாதன பொருட்கள் பெருமளவில் சேதமடைகின்றது. எனவே இப்பகுதியில் நிலவும் மின்னழுத்த குறைபாடு பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.