திருச்சி மாவட்டம் நெம்பர் 1 டோல்கேட் ரவுண்டானா அருகில் உள்ள மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் சாய்ந்து வருகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பம் முறிந்து சாலையில் விழுந்தால் வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாய்ந்திருந்த மின்கம்பத்தை சரிசெய்தனர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.