சென்னை, மடிப்பாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள தனியார் வங்கியின் அருகில் உள்ள மின்கம்பம் சிதிலமடைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதனால் அதன் அருகில் உள்ள கடைகள் மற்றும் அதை கடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு ஆபத்தான முறையில் இருக்கும் இந்த மின்கம்பத்தை மாற்ற மின்சாரவாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.