மதுரை மாவட்டம் பாசிங்காபுரம் முதல் அலங்காநல்லூர் செல்லும் சாலையில் மின்விளக்குகள் இல்லை. சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த சாலையில் மோட்டார்சைக்கிளில் இரவில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையில் மின்விளக்கு வசதி செய்து தரவும், வேகத்தடையில் வெள்ளை நிற வண்ணம் அடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக் வேண்டும்.