ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு ஊராட்சி சிலம்பிநாடு கிராமத்தில் தெருவிளக்குகள் வசதி போதிய அளவில் இல்லை. இதனால் அப்பகுதி முழுதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வெளியே சென்றுவர மிகவும் அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கூடுதல் தெருவிளக்கு வசதி ஏற்படுத்திதர வேண்டும்