அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மு.புத்தூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் வழியாக தினமும் அரசு பஸ்கள் மற்றும் பல்வேறு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் வி.கைகாட்டி செல்லும் வழியில் ஆபத்தான வளைவு பகுதியில் உள்ள தெருவிளக்கு பல மாதங்களாக பழுதடைந்து எரியாமல் உள்ளதால், இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தெருவிளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.