ஆபத்தான மின்மாற்றி

Update: 2025-09-07 06:07 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டம் செல்லாத்தூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள மின்மாற்றி மிகவும் சேதமடைந்து அதன் சிமெண்ட் பூச்சுகளில் விரிசல் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் மிகமோசமான நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த மின்மாற்றியை சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக மாற்றித்தர வேண்டும்.


மேலும் செய்திகள்