குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகை -வன்னியர்பாளையம் செல்லும் சாலையின் இருபுறமும் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக வரும் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே சாலையின் இருபுறமும் மின்விளக்குகளை அமைக்க வேண்டியது அவசியமாகும்.