மின்கம்பம் தேவை

Update: 2025-08-24 13:45 GMT

சென்னை வியாசர்பாடி, சுந்தரம் பவர் லைனில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மின்கம்பம் இல்லாமல் மின்வயர் மரங்களில் கட்டப்பட்டு அதன் வழியாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த மின்வயர்கள் சாலையில் நடுவே தொங்கி கொண்டிருப்பதால் மக்கள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும் இதனால் மழைகாலங்களில் பெரும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சாரவாரிய அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து மின்கம்பம் அமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்