மின்சார விபத்து அபாயம்

Update: 2025-08-17 16:49 GMT

குஜிலியம்பாறை தாலுகா டி.கூடலூர் கடைவீதி பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்குக்கு இணைப்பு கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட மின்சார பெட்டி சேதமடைந்த நிலையில் இருக்கிறது. மேலும் அந்த பெட்டி சிறுவர், சிறுமிகளுக்கு எட்டும் வகையில் மின்கம்பத்தின் அடிப்பாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்சார பெட்டியை சீரமைத்து, மின்கம்பத்தின் மேல் பகுதியில் இணைத்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்