ஈரோடு வைராபாளையம் கந்தசாமி தெருவில் 2 மின்கம்பங்கள் உள்ளன. இதில் ஒரு மின்கம்பம் பழுதடைந்து அதன் மேல்பகுதி ஏற்கனவே முறிந்து விழுந்துவிட்டது. மற்றொரு மின்கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த மின்கம்பம் முறிந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.