விழுப்புரம் அடுத்த விராட்டிக்குப்பம் ஊராட்சி புதுஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள், பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.