விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு அயன் ரெட்டியாபட்டி விலக்கில் அமைந்துள்ள அண்ணா நகர் கிழக்கு பகுதியில் போதிய அளவில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இரவில் அப்பகுதியில் பாம்புகள் , பூச்சிகள் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து இந்த பகுதியில் கூடுதல் மின் விளக்கு வசதி தர நடவடிக்கை எடுப்பார்களா?