புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியம், பெரம்பூர் கிராமத்தில் வீரம்மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன் மண்டப நுழைவுவாயில் அருகே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்துவந்த இந்த உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்தப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்ல பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் பெண்களிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எரியாமல் உள்ள உயர் கோபுர மின்விளக்கை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.