சென்னை புரசைவாக்கம், 2-வது சந்துக்கு அருகில் உள்ள ஈ. வெ. ரா. பெரியார் சாலையில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள மின்மாற்றியின் அருகே சாலையோர மரங்கள் ஓங்கி வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கடந்த 4 மாதங்களாக காற்றடிக்கும் போதெல்லாம் மரக்கிளைகள் மின்மாற்றியில் உரசி தீப்பொறி ஏற்பட்டு, பலநேரங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்மாற்றியை சுற்றியுள்ள மரக்கிளைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.