கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி வாங்கப்பாளையம் பகுதியில் உள்ள மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மேல்பகுதியில் இருந்து அடிபகுதி வரை மின்கம்பம் சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் சரிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.