சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி புரண்டி கிராமத்தில் உள்ள பெரும்பாலான தெரு விளக்குகள் கடந்த சில வாரங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழந்து காணப்படுவதால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் சாலையில் நடந்து செல்ல அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும்.