ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார நெடுஞ்சாலையில் பல முக்கிய இடங்களில் வாகனஓட்டிகளுக்கு எச்சரிக்கைவிடும் வகையில் சோலார் சிவப்பு விளக்கு கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை முறையான பராமரிப்புகள் இல்லாததால் சில பகுதிகளில் இயங்காமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே பழுதாகி கிடக்கும் விளக்குகளை சீரமைக்கவும், அவற்றை முறையாக பராமரிக்கவும் வேண்டும்.