உளுந்தூர்பேட்டையில் இருந்து திருவெண்ணெய்நல்லூர் செல்லும் சந்திப்பு சாலையில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு பழுதடைந்துள்ளதால், இரவு வேளையில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து உயர்கோபுர மின் விளக்கை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.